Wednesday, June 30, 2010

உண்மை

உன்னுடன் நடக்கும் போதெல்லாம்

தடுக்கி விழுகிறேன்...

நீ பிடித்துக்கொள்வாய் என்பதற்காகவே.....

Monday, June 28, 2010

நீ

ஒவ்வொரு முறை நீ
அலை பேசி இணைப்பை துண்டிக்கும் போதும்
என் இதயத்தையும் சேர்த்துத்தான் துண்டிகிறாய்..
அணைத்த அலைபேசியிலும் உன் மூச்சின் ஈரம் இருக்குமென
இன்னும் அதை காதோடு தான் அணைத்து இருக்கிறேன் நான்..

Monday, June 7, 2010

அம்மா

நான் முதன் முதலில் கற்றறிந்த வார்த்தை நீ..

நான் முதன் முதலில் உணர்ந்து அறிந்த தீண்டலும் நீ..

நான் முதன் முதலில் சுவையறிந்த உணவும் நீ..

நான் முதன் முதலில் தோள் சாய்ந்த தோழியும் நீ..

ஆதியாய் எனக்கு எல்லாமுமாக இருந்த உனக்கு 

இறுதி வரை இருப்பேன் உன் ஆதியாய்... 

உனக்கு அம்மாவாய்...