skip to main
|
skip to sidebar
revathi durai
joy and happiness
Monday, August 30, 2010
அந்த இரண்டு நொடிகளில்..
கண்கள் இமைக்க மறந்து விட்டன....
இதயம் துடிக்க மறந்து விட்டது..
உதடுகள் பேச மறந்து விட்டன...
இதெல்லாம் எதனை யுகமாய் என்ற
கணக்கை கூட என் அறிவு மறந்து விட்டது..
நீ என் கை பிடித்து பேசிய
அந்த இரண்டு நொடிகளில்..
நீயே சொல்லி விடேன்..
என் நா வறண்டு விட்டது..
உதடுகள் உலர்ந்துவிட்டன..
கண்கள் ஈரமாய் இருக்கின்றன..
இதயம் உறைந்து விட்டது..
கைகள் மரத்து விட்டன..
தயவு செய்து நீயே சொல்லி விடேன்..
நம் காதலை..
Tuesday, July 27, 2010
நிறம் மாறும் சூரியன்
நீ வண்ண சட்டை அணியும்போதெல்லாம்
நிறம் மாறுகிறது சூரியன்...
அடிக்கடி கருப்பு சட்டை அணியாதே..
தினம் தினம் சூரிய கிரகணத்தை
இந்த பூமி தாங்காது..
Monday, July 19, 2010
கவிதை
கவிதை என்பதற்கு விளக்கம் சொல்லவா?
சுருக்கமாய் சொன்னால் நீ..
விளக்கமாய் சொன்னால்
நீ மட்டும்...
Wednesday, July 7, 2010
உன்னைப்போல்
மனதைக் கவர்ந்த கவிதையொன்றை
வர்ணிக்கச் சொன்னார்கள்...
எவ்வளவு யோசித்தும்
வேறெதுவும் தோன்றவில்லை...
"உன்னைப்போல் இருந்தது"
என்பதைத் தவிர...
Tuesday, July 6, 2010
குறுஞ்சிரிப்பு
சமீபத்திய குறுஞ்செய்தி ...
இயற்பியல் இன்னும்
சுலபமாய் இருந்திருக்கும் ...
ஒரு வேளை..
நியூட்டன் தலையில் ஆப்பிளுக்கு பதிலாக
பலா பழம் விழுந்திருந்தால்..
Friday, July 2, 2010
எங்கு போகிறோமென்பது
எங்கு போகிறோம் என்பது லட்சியமே இல்லை
என் கால்களுக்கு....
உன் கை பிடித்து நடக்கும் போது.....
Wednesday, June 30, 2010
உண்மை
உன்னுடன் நடக்கும் போதெல்லாம்
தடுக்கி விழுகிறேன்...
நீ பிடித்துக்கொள்வாய் என்பதற்காகவே.....
Monday, June 28, 2010
நீ
ஒவ்வொரு முறை நீ
அலை பேசி இணைப்பை துண்டிக்கும் போதும்
என் இதயத்தையும் சேர்த்துத்தான் துண்டிகிறாய்..
அணைத்த அலைபேசியிலும் உன் மூச்சின் ஈரம் இருக்குமென
இன்னும் அதை காதோடு தான் அணைத்து இருக்கிறேன் நான்..
Monday, June 7, 2010
அம்மா
நான் முதன் முதலில் கற்றறிந்த வார்த்தை நீ..
நான் முதன் முதலில் உணர்ந்து அறிந்த தீண்டலும் நீ..
நான் முதன் முதலில் சுவையறிந்த உணவும் நீ..
நான் முதன் முதலில் தோள் சாய்ந்த தோழியும் நீ..
ஆதியாய் எனக்கு எல்லாமுமாக இருந்த உனக்கு
இறுதி வரை இருப்பேன் உன் ஆதியாய்...
உனக்கு அம்மாவாய்...
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
►
2016
(1)
►
April
(1)
▼
2010
(10)
▼
August
(2)
அந்த இரண்டு நொடிகளில்..
நீயே சொல்லி விடேன்..
►
July
(5)
நிறம் மாறும் சூரியன்
கவிதை
உன்னைப்போல்
குறுஞ்சிரிப்பு
எங்கு போகிறோமென்பது
►
June
(3)
உண்மை
நீ
அம்மா
Followers
About Me
revathi
TAMIL NADU, India
thendralum puyalum
View my complete profile